Saturday, 3 March 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-15



சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-15
-
சொர்க்கத்தில் தேவ உடலில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க,கோடிக்கணக்கான மக்களால் வழிபடப்படவேண்டும் என்று விரும்புவதும் மனமயக்கம்தான்
-
தனியாக நில்லுங்கள். கனவுகளிலிருந்தும் மனமயக்கத்திலிருந்தும் விடுபட்டு சுதந்திரராக இருங்கள்
-
இந்த மனவசியத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் இறைவன் அவற்றால் மயங்குவதில்லை.சாதாரண ஆன்மாக்கள் அதில் மயங்கிவிடுகின்றன
-
இதுவரை யாரும் பிறக்கவும் இல்லை.யாரும் இறக்கவும் இல்லை. எல்லாம் மனவசியம். எல்லோரும் மனவசியத்தில் ஆழ்ந்துள்ளார்கள்
-
மகான்களையும் சாதாரண மக்களையும் எப்படி பிரித்து அறிவது? மகான்களால் தீமை செய்ய முடியாது.நன்மையை மட்டுமே செய்ய இயலும்
-
மனவசியம் உங்களைவிட்டு அகலுமானால்,அதன்பிறகு ஒரு மலையே உங்கள்மீது விழுந்தாலும் கவலைப்படமாட்டீர்கள்.ஏனெனில் அதுவும் ஒரு மனமயக்கம்தானே
-
உலகின் உண்மை ஒரு கணம் அனுபூதியில் உணரப்பட்டுவிட்டால், அதன்பிறகு நீ எவ்வளவுகாலம் வாழ்ந்தாலும் ஏமாறமாட்டாய்
-
நீங்கள் மனவசியத்திலிருந்து விடுபட்டால், நீங்கள் ஓர் உடம்பு,ஆண்,பெண் போன்ற எண்ணங்கள் எல்லாம் அதனுடன் சேர்ந்தே விலகிவிடும்
-
நீங்கள் பரம்பொருளுடன் ஒன்று பட்டவர்கள் என்பது உங்களுக்குத்தெரியும். ஆனால் அதை அனுபூதியில் உணரவேண்டும்.அவ்வளவுதான்
-
எதிலிருந்து இந்த உலகம் வெளிப்பட்டுள்ளதோ,எதன்மீது இந்த நாடகம் நடைபெறுகிறதோ அதுவே பரம்பொருள்.உண்மையில் நாம் அவருடன் ஒன்றுபட்டவர்கள்
-
எல்லா ஆன்மாக்களுக்கும் ஆன்மா நானே.பசு,நாய்,மனிதன்,அரசன் எல்லோரிலும் இருப்பவன் நானே என்பதை மகான் உணர்கிறார்
-
உண்மையை தரிசித்தபின் உன்னிடமிருந்து இருள் அகன்றுவிடும். சந்தேகங்கள் அகன்றுவிடும்.செயல்களெல்லாம் உன்னைவிட்டு விலகிவிடும்
-
அனைத்திற்கும் அப்பால் பொன்னிறப் பேரொளி திகழ்கிறது.அவரே பிரம்மம்.அனைத்தையும் அறிபவரும் ஆன்மாவும் அவரே
-
யாருடைய இயல்பு பேரானந்தமோ,யார் மரணமிலாப் பெருநிலையாக ஒளிர்கிறாரோ அவரை முனிவர்கள் மேலான ஞானத்தின் மூலம் காண்கிறார்கள்
-
உடம்பின் ரத்தக் குழாய்கள் எல்லாம் இதயத்தில் கூடுகின்றன.அந்த இதயத்தில் ஓம் என்றும் மந்திரத்தை தியானம் செய்
-
நமது ஆன்மாவை பிரம்மத்துடன் ஒன்றுபடுமாறு செய்ய வேண்டும்.நீயே அவன் என்பதை உணர்வதன் மூலம் இதைச் செய்ய வேண்டும்
-
அந்த மேலான பரம்பொருள் எல்லோரின் உள்ளேயும் உறைகிறார்.அவரை அறிபவன் தளையிலிருந்து விடுபட்டு முக்தி அடைகிறான்
-
எங்கு சென்றால் மறுபடி பிறக்க வேண்டாமோ,எந்த இடத்தில் மாற்றங்கள் இல்லையோ, அந்த இடத்தை அறிய மேலோர்கள் விரும்புகிறார்கள்
-
உலகைத் துறந்து,புலன்களை அடக்கக் கற்றுக்கொண்டவர்கள் இறந்ததும் சூரியக் கிரணங்கள் வழியாக சென்று பரம்பொருள் வாழும் உலகை அடைகிறார்கள்
-
மாறாத இந்தப் பரம்பொருளிலிருந்தே பிரபஞ்சம் தோன்றியுள்ளது.முதலில் பரம்பொருளில் ஆசை எழுகிறது.பிறகு எல்லா உலகங்களும் தோன்றின
-
மகான்கள் அந்தப் பரம்பொருளைக் காண்கிறார்கள். அவரைக் காண்பதே மேலான ஞானம்
-
பரம்பொருளுக்கு கண்கள்,காதுகள்,கால்கள் இல்லை.அது எங்கும் நிறைந்தது.தனியானது. அதிலிருந்தே எல்லாம் வெளிவந்துள்ளது
-

No comments:

Post a Comment