Saturday, 3 March 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-13


சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-13
-
உடலுக்கும் மனத்திற்கும் உள்ளே அழியாத உண்மைப்பொருள் உள்ளது.இந்த பொருளுக்கு பிறப்பும் இல்லை,இறப்பும் இல்லை
-
பழைய காலத்தில் கடவுளை மக்கள் வெளியே தேடி அதனால் பயனில்லை என்று கண்டு,பின்பு அவரை தனக்குள்ளேயே தேடி கண்டுகொண்டார்கள்
-
ஞான ஆராய்ச்சி நமக்கு இன்பம் தரட்டும்,நம்மை காக்கட்டும்,நமக்கு ஆற்றலை தரட்டும்,நாம் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருப்போம்
-
மனத்தின் கோணல்கள் எல்லாம் நிமிர்ந்தவுடன்,இதயத்தின் முடிச்சுக்களெல்லாம் அறுபட்டவுடன், மனிதன் இறப்பற்றவன் ஆகிறான்
-
மனத்தை அலைக்கழிக்கும் ஆசைகளெல்லாம் அடங்கியபின்,இறக்கும் இயல்புடைய மனிதன் இறப்பற்றவன் ஆகிறான்.பிரம்மத்தை அடைகிறான்
-
ஒன்றேயான அந்தபரம்பொருளை யார் தனக்குள் காண்கிறானோ அவனுக்கே பேரின்பம் உரியதாகும்.வேறு யாருக்கும் அல்ல
-
கணத்திற்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகில் மாறுதலற்ற ஒன்றை யார் அறிகிறானோ அவனுக்கே பேரின்பம் கிடைக்கிறது
-
உணர்வற்ற இந்த உலகில் உணர்வுப்பொருளான பரம்பொருளை யார் அறிகிறானோ அவனுக்கே பேரின்பம் கிடைக்கிறது
-
ஒன்றேயான இந்த பரம்பொருள் எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருந்தாலும்,வெளியே உள்ள தூய்மையின்மை அதை பாதிக்காது
-
வெளியே பார்க்கவேண்டும் என்ற கண்களின் ஆர்வத்தை குறைத்து,உள்ளே பார்ப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்
-
அறிவுக்கு அப்பாற்பட்ட அழிவே இல்லாதவன் யாரோ,அவனை அறிவதால் மட்டுமே நாம் மரணத்திலிருந்து தப்ப முடியும்
-
நீ பயப்படாதே. விழித்தெழுந்து முயற்சியில் ஈடுபடு. லட்சியத்தை அடையும்வரை நில்லாதே
-
பாவச்செயல்களை செய்பவன்,மனம் அமைதிபெறாதவன், சஞ்சம் உடையவன், தியானம் செய்ய இயலாதவன் இவர்களால் ஆன்மாவை அடைய இயலாது
-
வேதங்களை ஓதுவதாலோ,கூர்ந்த அறிவாலோ ஆன்மாவை அடையமுடியாது.ஆன்மா யாரை தேடுகிறதோ அவனே அதை அடைவான்
-
சிறியதில் சிறியதாகவும்,பெரியதில் பெரியதாகவும் உள்ள இறைவன் எல்லா உயிர்களின் இதயக்குகையில் உறைகிறான்
-
நீ எதை அறிய விரும்புகிறாயோ அந்த ஆன்மா பிறப்பதும் இல்லை,இறப்பதும் இல்லை.அது உடல் அழிந்தாலும் அழிவதில்லை
-
யாரைக் காண மனிதன் பலவகை துறவுகளை மேற்கொள்கிறானோ அவரது பெயரை நான் சொல்கிறேன்.அதுதான் ஓம்.இதுவே அழிவில்லாத பிரம்மம்
-
ஆசிரியர் தெளிந்த ஞானம் இல்லாதவராக இருந்தால்,சீடன் நூறுமுறை உபதேசம் கேட்டாலும் ஆன்மாவை உணரமுடியாது
-
அறியாமையில் மூழ்கி,போகங்களில் உழல்பவனுக்கும் மிருகங்களுக்கும் வேற்றுமை இல்லை என்பதை நீ புரிந்துகொண்டிருக்கிறாய்
-

No comments:

Post a Comment