சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-12
-
சிற்றின்பம்,பேரின்பம் என இரண்டு வழிகள் உள்ளன.இதில் பேரின்ப வழியை தேர்ந்தெடுப்பவன் ஞானியாகிறான்
-
ஆன்மாவை அடைவதற்கான தகுதி எது? பார்வையை உள்ளே திருப்பி ஆன்மாவை அடையவேண்டும் என்ற ஆவல்தான் அதற்கான தகுதி
-
இந்த ஆன்மாவை பார்க்க வேண்டும் உணரவேண்டும்.ஆனால் நமது கண்களால் அதை காண முடியாது.தூயவர்களால் மட்டுமே அதை காண முடியும்
-
தொடக்கத்தில் என்ன இருந்தது? இருளை இருள் மூடியிருந்தபோது,இவற்றையெல்லாம் படைத்தது யார்? என்ற கேள்வி தான் முதலில் எழுந்தது
-
இந்த வான்வெளி மண்டலம் முழுவதும் தேடினாலும் பிறப்பு,இறப்புக்கான விடை கிடைக்காது.அதை நமக்குள்ளே தேட வேண்டும்
-
நம் உடம்பினுள் உள்ள அற்புத இயந்திரத்தை ஆராய்ந்தபோது பிரபஞ்ச ரகசித்தை அதற்குள் கண்டார்கள்
-
பல கோடி உயிர்களை நாம் பார்க்கிறோமே அவை எல்லாம் என்ன? ஒரே இறைவனின் பல கோடி பிரதிபிம்பங்கள்தான் இவை
-
நாம் இறைவனிடமிருந்து வேறுபட்டவர்கள். இறைவன்அல்ல.என்ற நினைப்பு இருக்கும் வரை இந்த உலகம் துக்கம் நிறைந்ததாகவே இருக்கும்
-
என் தலையில் இடி விழுந்தால் அந்த இடியும் நான்தான். ஏனெனில் இருப்பது நான் மட்டும்தானே.என்னை தவிர வேறு எதுவும் இல்லை
-
ஒருவன் மற்றொருவனுக்கு ஏன் தீமை செய்கிறான்? தனக்கு வரவேண்டிய இன்பத்தை மற்றொருவன் பறித்துவிடுவானோ என்ற அச்சம்தான் காரணம்
-
நானே அனைத்து உயிர்களுமாகியிருக்கிறேன் இதை அனுபவத்தில் உணர்ந்துவிட்டால்,எனக்கு மரணம் ஏது?எனக்கப்பால் வேறு எதுவும் இல்லையே
-
எல்லா கைளின் மூலம் நீ உழைக்கிறாய். எல்லா கண்களின் மூலம் நீ காண்கிறாய்.பலகோடி யிர்களின் மூலம் வாழ்வதும் நீதான்
-
காலின் கீழ் நெளியும் புழு முதல் மிக உயர்ந்த தேவன் வரை எல்லா உயிரினங்களின் உடல்கள் பலவானாலும் ஆன்மா ஒன்றுதான்
-
நான் ஏன் பிறரை நேசிக்க வேண்டும்? ஏனெனில் அவர்களும் நானும் ஒன்றல்லவா?இதனால்தான் அனைவரிடமும் அன்பாயிருக்க வேண்டும்
-
நான் எல்லையற்றவன் என்ற அனுபவம் உண்டான உடனேயே உண்மை அன்பு தோன்றும்,பயம் மறையும், துயரங்களெல்லாம் ஒழியும்
-
நான் பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவன். இறைவனிடமிருந்து வேறுபட்டவன் என்ற இந்தஎண்ணமே,இன்ப துன்பத்திற்கு முற்றிலும் காரணம்
-
எல்லா உயிர்களையும் நேசிக்கும் மாறாத அன்பும்,இரக்கமும்,ஆனந்தமும் மனிதனை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்திவிடுகின்றன
-
பயம் ஒழிகின்ற அன்றுதான் முடிவற்ற இன்பமும் எல்லையற்ற அன்பும் நெஞ்சில் இடம்பெறும்
-
ஆன்மா என்ற நிலையில் உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது.அதுதான் பல்வேறு உடல்கள் மூலம் பல்வேறு ஆன்மாவாக பிரதிபலிக்கிறது
-
பிரபஞ்ச ஆன்மாவாக இருப்பது எதுவோ அதுவே நீ. நீ இறைவனின் அம்சம் அல்ல,முழுமை. இறைவனாகிய முழுமை நீயே
-
இந்த பிரபஞ்சம் முழுவதும் ஓர் உடம்பு.இதற்குபின் பிரபஞ்ச மனமும்,அதற்குபின் பிரபஞ்ச ஆன்மாவும் உள்ளன
-
தானே தானாக நிற்கும் இந்த ஆன்மா எங்கும் நிறைந்தது.ஏனெனில் இதற்கு உருவம் இல்லை.காலம், இடத்தால் கட்டுப்படுத்தப்படாதது
-
No comments:
Post a Comment