சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-14
-
பரம்பொருளுடன் ஒன்றுபடுவதே உபநிடதம் நமக்கு காட்டும் ஒரே கருத்து.இந்த உலகமும் அதன் நாடகமும் மாயை.இவை இறைவன் அல்ல
-
பரம்பொருளுடன் ஒன்றுபடுவதே உபநிடதம் நமக்கு காட்டும் ஒரே கருத்து.இந்த உலகமும் அதன் நாடகமும் மாயை.இவை இறைவன் அல்ல
-
நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது மாயையில் மாட்டிக்கொள்ளாமலே விளையாடலாம்.இப்போது நீங்கள் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள்
-
பக்தியை பின்பற்றி இறைவனின் பாதங்களின் அருகே நின்றுகொண்டாலும் மாயை உன்னை பாதிக்காது
-
நாம் இந்த உலகமென்னும் மனவசியத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவேண்டுமானால் வெளி எல்லையை கடந்து ஞானம் என்ற பகுதியில் இருக்க வேண்டும்
-
பிரபஞ்சம் என்னும் இந்த இந்திரஜாலத்தை இறைவனே உண்டாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறார்.இந்த ஜாலங்களை உருவாக்கும் சக்தியே மாயை
-
எல்லாம் மனமயக்கம்.மனிதன்,மிருகங்கள் எல்லாமே மனவசியத்தில் ஆழ்ந்திருக்கின்றன.எல்லோரும் ஒரே நிலையில் இருப்பதால் ஒரே மாதிரி காண்கிறோம்
-
பிரபஞ்சம் முழுவதுமே மனவசியத்திற்கு உள்ளாகியிருப்பதாக வேதாந்த தத்துவம் கூறுகிறது. இதற்கு காரணம் யார்? நாமே
-
உன்னை மனவசியப்படுத்தி,இங்குள்ள புத்தகங்களை இல்லை என்று நம்பசெய்துவிட்டால்,நீ ஒருவருடம் இங்கிருந்தாலும் அதை காணமுடியாது
-
நீங்களே உங்களை மனவசியத்தில் ஆழ்த்திக்கொண்டு, உங்களை ஆண்,பெண் என்றெல்லாம் நினைத்துக்கொள்கிறீர்கள்
-
சொர்க்கம் நரகம் மட்டுமல்ல இந்த வாழ்க்கையும்கூட மனமயக்கமே என்று வேதாந்தி கூறுகிறான்
-
இந்த உலகம் உண்மை என்றால், சொர்க்கம் நரகம் போன்றவையும் உண்மையே.அவைகள் மனவசியம் என்றால் இதுவும் மனவசியமே
-
சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற மனவசியத்தில் என்னை ஆழ்த்திக்கொண்டால் இறந்தபின் சொர்க்கத்திற்கு செல்வதாகக் காண்கிறேன்
-
சச்சிதானந்த வடிவினரான பரம்பொருளே உண்மை. அவரே குரு.இந்த கனவுகளிலிருந்து விடுபட விரும்புபவரும் அவரே
-
சொர்க்கம் என்பது ஒரு கனவு.நரகம் என்பது இன்னொரு கனவு.இவ்வுலக வாழ்க்கை என்று எதை அழைக்கிறோமோ அதுவும் ஒரு கனவுதான்
-
சொர்க்கம்,நரகம் போன்ற முட்டாள்தனங்களையெல்லாம் விட்டுவிடுவதுதான் அறிவுள்ள சிந்திக்த்தெரிந்த மனிதனுக்கு அழகு
-
சொர்க்கம் போக வேண்டும் என்று வாழ்க்கை முழுவதும் கனவு கண்டவர்கள்,இறந்த பின் கனவுகண்ட சொர்க்கத்திற்கு செல்கிறார்கள்
-
ஆன்மாவிற்கு பிறப்போ இறப்போ கிடையாது.அது எங்கும் நிறைந்தது.அது நீங்களே.நீங்கள் எங்கும் இருக்கிறீர்கள்
-
No comments:
Post a Comment