சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-11
-
வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருளால் ஆனவன்
1. உடல், 2.ஆவிஉடல்(சூட்சுமஉடல்) ,3.ஆன்மா
-
நாம் காணும் உடல் தூலசரீரம். மனம்,புத்தி,நான்-உணர்வால் ஆன லிங்க சரீரம் அதற்கு பின்னால் உள்ளது.அடுத்து ஆன்மா உள்ளது
-
பிரபஞ்சம் எந்த அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதே அமைப்பில்தான் அதன் ஒவ்வொரு பகுதியும் கட்டப்பட்டிருக்கும்
-
இந்த பொருள்களெல்லாம் எங்கிருந்து வந்தன?சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் வந்தது என்று கூறுவது தவறு.
-
இந்த பூமி குளிர்ந்துகொண்டே சென்று ஒரு காலத்தில் துண்டுதுண்டாக சிதறிவிடும்.மீண்டும் அந்த சிறதலிலிருந்து பூமி உருவாகும்
-
சூன்யத்திலிருந்து இந்த உலகம் படைக்கப்பட வில்லை. இறைவனிடமிருந்து வெளிப்பட்டது என்று சொல்வதுதான் சரி
-
உலகம் துவங்கிய காலத்தை நினைக்க தொடங்கினால்,அதற்கு முன் உள்ள காலத்தையும் நினைக்கவேண்டிவரும்.காலத்திற்கு துவக்கம் இல்லை
-
பிரபஞ்சத்தின் எல்லையை நினைக்க துவங்கினால் எல்லைக்கு அப்பால் உள்ளதையும் நினைக்க வேண்டிவரும்.அப்போது எல்லை பொருளற்றதாகி விடுகிறது
-
ஒரு பொருளை உருவாக்க சிறிது மூலப்பொருளும், உருவாக்குபவனின் சக்தியும்தேவை.சக்தி விலகிவிட்டால் அது அழிந்துவிடும்
-
ஆறு தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாலும்,ஆற்று நீர் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது.இவ்வாறே உலகத்தில் உள்ள அனைத்தும்
-
ஒருவன் முக்தி பெற்றதும் தூலவுடலும், ஆவி உடலும் மூலப்பொருட்களாகப் பிரிந்துவிடுகிறது.ஆனால் ஆன்மா அழிவற்றதாக இருக்கும்
-
எப்படி ஆன்மா உடலுக்கும் மனத்திற்கும் ஆன்மாவாக இருக்கிறதோ, அப்படியே அனைத்து ஆன்மாக்களுக்கும் ஆன்மாவாக இருப்பவர் இறைவன்
-
பல ஆன்மாக்களையும் இயற்கையையும் கொண்ட இந்த பிரபஞ்சம் இறைவனுக்கு உடல்போல் அமைகிறது.இது விசிஷ்டாத்வைதம்
-
மனிதன் கடவுளைக் காணும்போது தன்னிலிருந்து வேறுபட்டவராக அவரை காண்கிறான்.இது துவைத நிலை சாதாரண மதம்
-
பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள இந்த ஆன்மாக்களெல்லாம் இறைவனிடமிருந்து வந்துள்ளன.ஒவ்வோர் ஆன்மாவும் இறைவனின் ஓர் அம்சம்
-
இயற்கை முழுவதையும் எடுத்துக்கொண்டால் அதற்கு தொடக்கம் முடிவு இல்லை.ஆனால் அதற்குள் பலகோடி மாறுதல்கள் நடக்கின்றன
-
ஆன்மா எந்த மூலக்கூறுகளாலும் உருவாக்கப்படவில்லை. எனவே அதற்கு அழிவு இல்லை.தொடக்கம் முடிவு இரண்டும் இல்லை
-
மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீண்டும் மூலக்கூறுகளாக பிரிந்துவிடும்.இதற்கு பெயர்தான் அழிவு
-
ஒரு பொருள் தன் மூலக்கூறுகளாக பிரிவதையே அழிவு என்கிறோம்.டம்ளரை பொடியாக்கினால் அதன் மூலக்கூறுகளாகிவிடும் அழியாது
-
இறைவன் ஒரு காலத்தில் உலகை படைத்துவிட்டு ஓய்வில் உள்ளார் என்பது தவறு.அவரது படைப்பு எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறது
-
காலத்திற்கு தொடக்கம் இல்லை.அதேபோல் இடம்(விண்வெளி) என்பதற்கும் தொடக்கம் இல்லை.இரண்டிற்கும் முடிவும் இல்லை
-
முதன்முதலாக படைப்பு எப்படி எங்கே இருந்தது?இந்த கேள்வியே தவறு.முதல் என்ற ஒன்று இல்லவே இல்லை. தொடக்கம் முடிவு இல்லை
-
பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியவர் இறைவன்.அது அவரது மூச்சின் வழியே வெளிவருவதுபோல் உள்ளது.மறுபடியும் அவருள்ளேயே ஒடுங்குகிறது
-
உலகிலுள்ள எந்த பொருளுக்கும் அழிவு என்பது இல்லை.ஜடப்பொருளின் ஓர் அணுவைக்கூட நம்மால் அழிக்க முடியாது
-
உலகிலுள்ள சக்தியின் மொத்த அளவு எப்போதும் ஒன்றுதான்.சக்தியின் அளவை நம்மால் கூட்டவும் முடியாது,அழிக்கவும் முடியாது
-
சூன்யத்திலிருந்து எதையுமே படைக்க முடியாது.அது போல் இருக்கும் எதையுமே இல்லாமல் செய்யவும் முடியாது
-
இந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதியில் என்ன இருக்குமோ அது பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் என்பதை காணலாம்
-
மனம்,புத்தி,நான்-உணர்வு இவைகளால் ஆக்கப்பட்ட சூட்சும சரீரம் பல யுகங்களானாலும் அழியாமல் இருக்கும்