Posts

சுவாமி விவேகானந்தரின் மரணத்தின் ரகசியம் என்ன?பாகம்-1

Image

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-11

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-11 அத்தியாயம் -2 ........... 41.  பிராம்மண பிரம்மசாரி மான் தோலால் ஆன மேலாடையையும், க்ஷத்ரிய பிரம்மசாரி குரு மிருகத்தின்ஆன தோலால் ஆன மேலாடையையும், வைசிய பிரம்மசாரி ஆட்டுத்தோலால் ஆன மேலாடையையும்  அணிய வேண்டும்.  பிராம்மணன்  நார்மடித் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.  க்ஷத்ரியன் பட்டுத் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.  வைசியன் சணல் ஆடையை அரையாடையாக அணிய வேண்டும். (மிகப்பழைய காலத்திலேயே பட்டுத்துணி வழக்கத்தில் இருந்துள்ளது.குளிரிலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்காகவே மிருகத்தின் தோலாடையை பயன்படுத்துகிறார்கள்) ................. 42.  பிராம்மண பிரம்மசாரி, முஞ்சி புல்லால் திரிக்கப் பட்டு, வழுவழுவென்று சமானமான மூன்று இழைகள் கொண்ட அரைஞாணை அணிய வேண்டும்.  அவ்வாறே க்ஷத்ரிய பிரம்மசாரி மூர்வா புல்லினால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும். வைசிய பிரம்மசாரி சணலால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும். (இந்த அரைஞாணில்தான் கோவணம் கட்டிக்கொள்வார்கள்) .......

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-10

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-10 அத்தியாயம் -2 ........... 31.  பிராம்மண குழந்தைக்கு வைக்கும் பெயர் சுபம் தரும் வண்ணம் இருக்க வேண்டும். க்ஷத்திரியக் குழந்தைக்குப் பலம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். வைசியக் குழந்தைக்கு செல்வம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். சூத்திரர்களுக்கு   ஏவலன் என்பதை அறியும் வகையில் பெயர் வைக்க வேண்டும். .................... 32.  பிராம்மணனுடைய பெயர் சர்மாஎன்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும். ராஜாவுக்கு  ரக்ஷணம் சேர்ந்ததாக இருக்க வேண்டும். வைசியனுக்கு செல்வத்தோடு  கூடியதாக  இருக்க வேண்டும். சூத்திரனுக்கு தாசன் என்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும். ( பிராம்மணனுக்கு நாராயணசர்மா, சிவ சர்மா என்று தெய்வப் பெயர்களாக அமைய வேண்டும். பிராம்மணன் வீட்டில்  எப்போதும் வேத சப்தமும், ஹோமப்புகையும் இருக்கும். அங்கே குழந்தைகளையோ  பெரியவர்களையோ  கூப்பிடும்  குரல் கூட புண்ணியத்தைத் தருவதாக அமைய வேண்டும். (க்ஷத்திரியனுக்கு  வர்மா என்ற பதம் சேர்க்கப் பட வேண்டும் பெயரிலேயே கம்பீரமும் இவன் காக்கப் ப...

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-9

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-9 அத்தியாயம் -2 ......................... 21.  இமயமலைக்கும் விந்திய  மலைக்கும் இடையில் , சரஸ்வதி நதிபாயும் தேசத்துக்கும், பிரயாகைக்கும் இடைப்பட்ட  தேசத்துக்கு  ” மத்திய தேசம்” என்று பெயர். .................. 22.  கிழக்குக் கடலுக்கும், மேற்குக் கடலுக்கும் இடையிலுள்ள  பிரதேசத்துக்கு ” ஆர்யாவர்த்தம்” என்று பெயர். (தென்னிந்தியா) .......................... 23.  கறுப்புக்கோடுகள் கொண்ட மான் பிறந்து தன்னிச்சையாக சஞ்சரிக்கின்ற பிரதேசமே யக்ஞங்கள் செய்வதற்கு உகந்த இடமாகும். மற்றைய இடங்கள் மிலேச்ச தேசம் எனப்படும். மிலேச்ச தேசம் யக்ஞம் செய்வதற்கு அருகதையற்ற இடமாகும். .......... 24.  பிராம்மணர், க்ஷத்ரியர், வைசியர் என்னும் இருபிறப்பாளர்களாகிய மூவர்ணத்தாரும் முயற்சி செய்து, யக்ஞபூமிகளான இந்த தேசங்களை அடைய வேண்டும். சூத்திரர்கள் தங்கள் ஜீவனமான தொழில் நிமித்தமாக எந்தத் தேசத்திலும் வசிக்கலாம். ................ 25.  இதுவரை இந்த தர்ம சாஸ்திரத்தின் தோற்றம் முழுவதுமாகக் கூறப்பட்டது. இவ்வுலகம் தோன்றிய...

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-8

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-8 அத்தியாயம் -2 ......................... 11.  பிரமாணங்களான ஸ்ருதிகளையும், ஸ்ம்ருதிகளையும் எந்த பிராமணனோ, க்ஷத்ரியனோ, வைசியனோ அவமதித்து தூஷிக்கின்றானோ, அப்படிப்பட்ட நாஸ்திகளை நல்லவர்கள் புறக்கணிக்க  வேண்டும். (நாஸ்திகள் என்பவன் முற்றிலும் வேதத்தை ஏற்காதவன்.அப்படிப்பட்ட முதல் மூன்று ஜாதியைச்சேர்ந்த நாஸ்திகர்களையும் ஜாதியைவிட்டு விலக்கிவிடுதல்,சமுதாயத்தைவிட்டு விலக்கிவைத்தல் போன்ற பழக்கங்கள் முற்காலத்தில் இருந்துள்ளன) ................... 12.  வேதம், ஸ்ம்ருதி, நல்ல ஆசாரம், சுய ஆனந்தம் இந்த நான்கும் தர்மத்தின்  சொரூபம் என்று கூறுவார்கள் பெரியோர். ................... 13.  அர்த்தம், காமம் இவைகளில் விருப்பம் இல்லாதவனுக்கே தர்ம ஞானம் விதிக்கப் பட்டுள்ளது. தர்மத்தை அறிய விரும்புபவனுக்கு முக்கியமான பிரமாணம் வேதமே ஆகும். .............. 14.  எங்கே தர்ம சாஸ்திரங்களுக்குள் ஒன்றுக் கொன்று வேறுபாடு காணப்படுகின்றதோ, அங்கே இரண்டு விதமாக தர்மங்கள் கூறப்பட்டிருக்கும். வித்வான்கள் இவ்விரண்டு தர்மங்களையும் கடைப்பிட...

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-7

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-7 அத்தியாயம் -2 ......................... 1.  வேதம் முழுவதையும் நன்கு அறிந்தவர்களாகவும், விருப்பு வெறுப்பு அற்றவர்களாகவும் சாதுக்களாகவும் உள்ள மஹான்கள்  எப்போதும் அனுஷ்டிக்கின்ற தர்மம் எதுவோ அதை எடுத்தியம்புகிறேன், கேளுங்கள். ......................... 2.  விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக காரியங்களைச் செய்தல் என்பது  போற்றுதலுக்குரிய விஷயமன்று.  எனினும்  இவ்வுலகில் பலனை எதிர் நோக்காமல் காரியம் செய்வது என்பது  அரிதான விஷயம்.  வேதங்களை நன்கு படித்தல், வேதங்களில் கூறப் பட்டுள்ள தர்மங்களில் ஆழ்ந்து ஈடுபாடு  கொண்டிருத்தல் என்பதும் பலனைக் கொடுக்கக் கூடியதேயாகும். . (வேதங்களின் முக்கியமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.1. பலன்களைத்தரக்கூடிய செயல்களைக்குறித்த யாகங்கள்,பிரார்த்தனைகள் போன்றவை. 2. பலன்களைத் துறந்து முக்தியடைவதுபற்றிய போதனைகள்.) ....................... 3.  இவை இவை எனக்குத்தேவை என்று கோருவதற்கு ” சங்கல்பம்” என்று பெயர். சங்கல்பத்துக்கு மூல காரணமாக இருப்பது ஆசை. ஆசையாலேயே சங்...

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-6

 மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-6 ... 101.  பிராம்மணன் தன்னுடைய  செல்வத்தையே தான் அனுபவிக்கிறான். தன்னுடைய ஆடைகளையே தான் உடுத்துகின்றான். தன்னுடைய செல்வத்தையே பிறர்க்கு அளிக்கின்றான். (இந்த உலகமே பிராமணனுக்கு சொந்தமானது என்பதை இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம்.பிராமணன் என்பவன் யார் என்பதற்கான விளக்கத்தையும் பார்த்தோம்) ............... 102.  ஞானியான ஸ்வாயம்புவ மநு, பிராம்மணனுடையனவும், மற்றவர்களுடையனவுமான தர்மங்களை தெரிவிப்பதற்காக இந்த தர்ம சாஸ்திரத்தை வழங்கினார். ........ 103.  இந்த மனு தர்ம சாஸ்திரத்தை படிப்பதனால் அடையும் பலன்களை அறிந்து பிராம்மணன் இந்த  தர்ம சாஸ்திரத்தை நன்கு முயற்சியோடு படிக்க வேண்டும். சிஷ்யர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். ..... 104.  இந்த சாஸ்திரத்தை மிக்க நியமத்தோடு படிக்கும் பிராம்மணனுக்கு மனத்தாலும்  வாக்காலும் உடலாலும் ஏற்படும் எந்த பாபமும் அண்டாது. அதாவது இதைப் படித்து அறிந்த பிறகு பாபமே  செய்ய மாட்டான். ........................ 105.  இந்த சாஸ்திரத்தை படித்து ஓதுபவன் தன்னுடைய முன்ன...