ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 49
வகுப்பு-49 நாள்-4-3-2020 - ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் - சகுணபிரம்மம், நிர்குணபிரம்மம் என்று இரண்டு நிலைகள் இருக்கின்றன. - அர்ஜுனன் கேட்கிறான் - ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே। யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா:॥ 12.1 ॥ 12.1 இவ்வாறு எப்போதும் யோகத்தில் உறுதிப்பாட்டுடன் உம்மை உபாசிக்கும் பக்தர்கள் மற்றும் பிரம்மத்தை உபாசிக்கும் ஞானிகள் இவர்களில் யோகத்தை நன்கு அறிந்தவர் யார்? - ஸ்ரீபகவான் சொன்னது மய்யாவேஷ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே। ஷ்ரத்தயா பரயோபேதா: தே மே யுக்ததமா மதா:॥ 12.2 ॥ 12.2.என்னிடம் மனதைவைத்து, யோகத்தில் நிலைத்தவராய், மேலான ச்ரத்தையுடன் கூடியவராய் யார் என்னை உபாசிக்கிறார்களோ அவர்கள் யோகத்தில் நிலைபெற்றவன் என்பது என் கருத்து - யே த்வக்ஷரமநிர்தேஷ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே। ஸர்வத்ரகமசிம்த்யம்ச கூடஸ்தம் அசலம்த்ருவம்॥ 12.3 ॥ ஸம்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தயா:। தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:॥ 12.4 ॥ 12.3,4 ஆனால் யார் எங்கும் சமபுத்தியுள்ளவ...