Thursday, 27 July 2017

ஞானத்திற்கான முதற்படி சொற்பொழிவிலிருந்து



சுவாமி விவேகானந்தரின்
ஞானத்திற்கான முதற்படி சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள்
‡‡‡
நாம் ஏன் துன்பப்படுகிறோம்? ஏனெனில் நாம் கட்டுண்டிருக்கிறோம்
நம்மை கட்டிவைத்திருப்பது யார்?நாம்.நாமே

ஆசைகள் இருந்து அவற்றை நிறைவேற்றும் வழி
கிடைக்காமல் போகும்போதுதான் துன்பம் என்ற
வினோதமான பிரதிச்செயல் உண்டாகிறது.

குழந்தை பிறக்கும்போதே அதன் துன்பமும் தொடங்கிவிடுகிறது
பலவீனனாக,உதவியற்றவனாக அவன் பூமிக்கு வருகிறான்
வாழ்க்கையின் முதல் அறிகுறியே அழுகைதான்
-
நாமே நமது கர்மத்தை உருவாக்கியிருக்கிறோம் என்றால்,அதை
அழிக்கவும் நம்மால் முடியும் என்பது உண்மைதானே?

ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன்.நீ காண்கின்ற ஒவ்வொரு
மனிதனும் இயல்பிலேயே கடவுள்தான்

எல்லா துன்பங்களுக்கும் அறியாமையே காரணம்.எல்லா
கொடுமைகளுக்கும் அறியாமையே காரணம்.அறிவு நம்மை
சுதந்திரர்களாக்குகிறது.

உன்னை அறிந்துகொள்.நீங்கள் உண்மையில் யார்,உங்கள்
உண்மை இயல்பு எது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
அப்போது துன்பங்கள் எல்லாம் நீங்கிவிடும்

எதையும் நம்பாதீர்கள்.ஒவ்வொன்றையும் நம்புவதிலிருந்து
விடுபடுங்கள்.அறிவுப்பூர்வமாக இருக்க துணிவுகொள்ளுங்கள்.இதுதான்
ஞானியாவதற்கான முதற்படி

கோவிலை நம்பாதவனும்,எந்த மதப்பிரிவையும் சாராதவனையும்,எதையும்
நம்பமாட்டேன் என்று சொல்லித்திரிபவனையும் பகுத்தறிவுவாதி என்று
எண்ணிவிடாதீர்கள்

இந்த உடம்பு ஒரு பொய்த்தோற்றம் என்று உங்கள் பகுத்தறிவு கூறினால்
உடம்பை விட்டுவிட நீங்கள் தயாராக இருந்தால்,அதற்கான துணிவு இருந்தால் நீங்கள்
பகுத்தறிவுவாதி
-
ஏதாவது ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.மரணம்வரை உறுதியாக
அதை பின்பற்றுங்கள்.இதுவே முக்திக்கு வழி

பகுத்தறிவை பின்பற்றுபவர் செய்யும் முதல் தவறு உண்மையை நோக்கிபோக
தயங்குவதே.உண்மை(கடவுள்) நம்மை தேடி வரவேண்டும் அவர்களிடம்
சென்று கைகட்டி நிற்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்

நாம் இயற்கையின் கைகளில் அடிமைகள்.ஒருவாய் சொற்றுக்கு அடிமைகள்
புகழுக்கு அடிமைகள்,மனைவிக்கு அல்லது கணவனுக்கு அடிமைகள்,
குழந்தைக்கு அடிமை.இதை அன்பென்று கூறுகிறீர்களா?

பெரியபெரிய நாட்டையும் நகரங்களையும் கட்டி, முட்டாள்தனமான வாழ்க்கை
நடத்திவிட்டால் அது நாகரீகம் ஆகிவிடாது.உண்மையான நாகரீகம் என்பது
கடவுளைநோக்கிச் செல்வது,புலன்களை அடக்குவது.

வாழ்க்கையின் துன்பத்தை நீ உணர்ந்துவிட்டால்,இத்தகையை வாழ்க்கை
வாழத் தகுந்ததல்ல என்பது உனக்கு உறுதியாகிவிட்டால் நீ ஞானத்தை நோக்கி
முதற்படி எடுத்து வைத்துவிட்டாய்
---
இந்துமதம்- விவேகானந்தர் விஜயம்

















No comments:

Post a Comment