Posts

ஆவி உலகம்-தொடர்-பாகம்-10

  ஆவி உலகம்-தொடர்-பாகம்-10 .. பாம்பு புற்று வழிபாடு நாகராஜா,நாகராணி போன்ற வழிபாடுகளின் பின்னணி என்ன? ஆவி பாதித்த மனிதனை காப்பாற்ற என்ன வழி? . திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண் பாம்பு கடித்து இறந்தால் அவர்களை நாகதேவதையாக,நாகராஜாவாக வழிபடும் பழக்கம் முற்காலத்தில் இருந்துள்ளது. நாய் கடித்து இறப்பவன் கடைசி நாளில் நாயைப்போல கத்திகத்தி சாவதை போல. பாம்பு கடித்து இறப்பவரின் சூட்சும உடல் பாம்பின் குணங்களால் பாதிப்படைகிறது. இறந்தவரின் சூட்சுமஉடல் பாதி மனித குணமாகவும் பாதி பாம்பின் குணமாகவும் மாறிவிடுகிறது. பாம்பு தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதற்காக மக்கள் நாகதேவதை வழிபாடுகளை செய்வார்கள்.   .. பெரும்பாலான கடவுளின் உடலில் பாம்பு மாலைபோல சுற்றிக்கொண்டிருக்கிறதே! விஷ்ணு பாம்பின்மீது படுத்திருப்பதுபோல ஓவியங்கள் உள்ளனவே இதற்கு பின்னால் உள்ள கருத்து என்ன? .. அது உண்மையில் பாம்பு இல்லை. அது ஒரு தத்துவத்தை விளக்குவதற்காக வரையப்பட்ட ஓவியங்கள். நாகம் என்றால் ந+அகம் என்று பிரித்து படிக்க வேண்டும். ”அகம் ” என்றால் நான். ”ந ” என்றால் இல்லை என்று அர்த்தம். அகம் இல்லாதது. நான் இல...

ஆவி உலகம்-தொடர்-பாகம்-9

  ஆவி உலகம்-தொடர்-பாகம்-9 .. இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா? அல்லது சிலர் பிறக்காமல் போவார்களா? மிருகங்கள் எல்லாம் இறந்தபிறகு ஆவியாக சுற்றுமா? .. இந்த கேள்விக்கு விடைகூறும்முன்னர். குண்டலினி சக்தி பற்றி சிறிது தெரிந்துகொள்வோம். குண்டலினி சக்திக்கு ஏழு மையங்கள் உள்ளன. அதில் கீழ் உள்ளது மூலாதாரம், மேல் உள்ளது சகஸ்ராரம். சகஸ்ராரத்திற்கு உயிர் சென்றால் பிரம்மத்தில்(கடவுளில்) கலந்துவிடும். அப்போது உடல் இயங்காமல் நின்றுவிடும், முச்சு நின்றுவிடும். மனம் நின்றுவிடும். .. இதற்கு நேர் மாறான ஒரு நிலை உள்ளது. அதுதான் மூலாதாரம் இந்த இடத்திற்கு உயிர் சென்றால்கூட மூச்சுநின்றுவிடும், மனம்நின்றுவிடும். ஒவ்வொரு உயிருக்கும் மூலாதாரம் என்ற ஒரு மையம் இருக்கிறது. திடீரென்று ஏற்படும் அதிர்ச்சியின் காரணமாக உயிர் மூலாதாரத்தில் நிலைகொள்ளும். அப்போது உடல் உணர்வற்றநிலைக்கு சென்றுவிடும். மனிதன் இறந்தவனாகிவிடுகிறான். இதயம் நின்றுவிடுகிறது. மூச்சும் நின்றுவிடுகிறது. .. மூலாதாரத்தில் உயிர் நிலைகொண்டால் மனிதன் உயிர் அதற்குள்ளே அடங்கிவிடுகிறது. சகஸ்ராரத்திற்கும்,மூல...

ஆவி உலகம்-தொடர்-பாகம்-8

  ஆவி உலகம் - தொடர் - பாகம் -8 .. ஆவி அடிக்குமா ? ஆவி அடித்து சாகிறார்களா ? பொருட்களை ஆவியால் தூக்க முடியுமா? .. நான் சிறுவயதாக இருக்கும்போது எங்கள் ஊரில் ஒரு பெண்ணை இரவில் ஆவி அடித்துகொன்றுவிட்டதாக பேசினார்கள் . முதுகில் பெரிய கைத்தடம் இருந்ததாக பேசிக்கொண்டார்கள் . மனிதனுடைய கையைவிட பெரிய கைத்தடம் . ஆவி மருத்துவர் ஒரு பெண்ணின் முற்பிறவிகளைப்பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்போது . முற்பிறவியில் ஒரு சர்ச்சிக்குள்   இரவு நேரத்தில் ஒரு ஆவி அடித்து அவள் இறந்துவிட்டதாக கூறியிருந்தாள் . அந்த வீடியோ கிளிப் இன்னும் என்னிடம் உள்ளது . .. ஆவி சூட்டசும உடலோடு கூடியது அப்படி இருக்கும்போது தூவஉடலில் உள்ள மனிதனை எப்படி அடிக்க முடியும் ? .. குறிசொல்பவர் ஒருவர் ஒரு ஆவியின் உதவியால் எலுமிச்சம் பழம் ஒன்றை நீண்ட தூரத்திற்கு உருட்டிசெல்வதை நான் பார்த்திருக்கிறேன் . பெரிய முக்கோணம் ஒன்றை தரையில் வரைந்தார் அந்த எலுமிச்சம் பழம் பெதுவாக அந்த முக்கோணத்தின்மேல் உருண்டு சென்றது . அந்த எலுமிச்சம்பழம் அவர் கொண்டு...