Posts

விவேகானந்தரின் மரணத்தில் ரகசியம் என்று ஏதாவது இருக்கிறதா

  சுவாமி விவேகானந்தருக்கு நோய் வந்தது எதனால்? யோகிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படுமா? விவேகானந்தரின் மரணத்தில் ரகசியம் என்று ஏதாவது இருக்கிறதா? என்று பார்க்கப்போகிறோம் .. - ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் அனைவரையும் ஒரேமாதிரி அளவிட முடியாது. பொதுவாக ராஜயோகம் பயில்பவர்கள் தனிமையில்,அமைதியான வாழ்க்கையை நாடி சென்றுவிடுவார்கள்.ஆகவே அவர்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.உடல் நலன் பாதிக்கப்பட்டால் அதை சரி செய்யவும் அவர்களால் முடியும். - பக்தியோகத்தில் செல்லும் ஒருவருக்கு உடல் நலன் பாதிக்ப்பட்டால் அது இறைவன் தந்த பரிசு என்று நினைத்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள்.அதை நீக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டார்கள் - ஞான யோகத்தில் செல்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படால் அதைக்குறித்து கவலைப்பட மாட்டார்கள்.உடல் என்பது பொய்த்தோற்றம் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று நினைப்பார்கள். - கர்மயோகத்தில் செல்லும் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால். தன்னுடைய முன்வினை பயன்களால்தான் இவ்வாறு நடக்கிறது அவைகளை அனுபவிப்பதன் மூலம் பாவங்கள் ப...

சுவாமி விவேகானந்தரின் மரணத்தின் ரகசியம் என்ன?பாகம்-1

Image

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-11

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-11 அத்தியாயம் -2 ........... 41.  பிராம்மண பிரம்மசாரி மான் தோலால் ஆன மேலாடையையும், க்ஷத்ரிய பிரம்மசாரி குரு மிருகத்தின்ஆன தோலால் ஆன மேலாடையையும், வைசிய பிரம்மசாரி ஆட்டுத்தோலால் ஆன மேலாடையையும்  அணிய வேண்டும்.  பிராம்மணன்  நார்மடித் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.  க்ஷத்ரியன் பட்டுத் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.  வைசியன் சணல் ஆடையை அரையாடையாக அணிய வேண்டும். (மிகப்பழைய காலத்திலேயே பட்டுத்துணி வழக்கத்தில் இருந்துள்ளது.குளிரிலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்காகவே மிருகத்தின் தோலாடையை பயன்படுத்துகிறார்கள்) ................. 42.  பிராம்மண பிரம்மசாரி, முஞ்சி புல்லால் திரிக்கப் பட்டு, வழுவழுவென்று சமானமான மூன்று இழைகள் கொண்ட அரைஞாணை அணிய வேண்டும்.  அவ்வாறே க்ஷத்ரிய பிரம்மசாரி மூர்வா புல்லினால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும். வைசிய பிரம்மசாரி சணலால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும். (இந்த அரைஞாணில்தான் கோவணம் கட்டிக்கொள்வார்கள்) .......

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-10

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-10 அத்தியாயம் -2 ........... 31.  பிராம்மண குழந்தைக்கு வைக்கும் பெயர் சுபம் தரும் வண்ணம் இருக்க வேண்டும். க்ஷத்திரியக் குழந்தைக்குப் பலம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். வைசியக் குழந்தைக்கு செல்வம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். சூத்திரர்களுக்கு   ஏவலன் என்பதை அறியும் வகையில் பெயர் வைக்க வேண்டும். .................... 32.  பிராம்மணனுடைய பெயர் சர்மாஎன்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும். ராஜாவுக்கு  ரக்ஷணம் சேர்ந்ததாக இருக்க வேண்டும். வைசியனுக்கு செல்வத்தோடு  கூடியதாக  இருக்க வேண்டும். சூத்திரனுக்கு தாசன் என்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும். ( பிராம்மணனுக்கு நாராயணசர்மா, சிவ சர்மா என்று தெய்வப் பெயர்களாக அமைய வேண்டும். பிராம்மணன் வீட்டில்  எப்போதும் வேத சப்தமும், ஹோமப்புகையும் இருக்கும். அங்கே குழந்தைகளையோ  பெரியவர்களையோ  கூப்பிடும்  குரல் கூட புண்ணியத்தைத் தருவதாக அமைய வேண்டும். (க்ஷத்திரியனுக்கு  வர்மா என்ற பதம் சேர்க்கப் பட வேண்டும் பெயரிலேயே கம்பீரமும் இவன் காக்கப் ப...

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-9

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-9 அத்தியாயம் -2 ......................... 21.  இமயமலைக்கும் விந்திய  மலைக்கும் இடையில் , சரஸ்வதி நதிபாயும் தேசத்துக்கும், பிரயாகைக்கும் இடைப்பட்ட  தேசத்துக்கு  ” மத்திய தேசம்” என்று பெயர். .................. 22.  கிழக்குக் கடலுக்கும், மேற்குக் கடலுக்கும் இடையிலுள்ள  பிரதேசத்துக்கு ” ஆர்யாவர்த்தம்” என்று பெயர். (தென்னிந்தியா) .......................... 23.  கறுப்புக்கோடுகள் கொண்ட மான் பிறந்து தன்னிச்சையாக சஞ்சரிக்கின்ற பிரதேசமே யக்ஞங்கள் செய்வதற்கு உகந்த இடமாகும். மற்றைய இடங்கள் மிலேச்ச தேசம் எனப்படும். மிலேச்ச தேசம் யக்ஞம் செய்வதற்கு அருகதையற்ற இடமாகும். .......... 24.  பிராம்மணர், க்ஷத்ரியர், வைசியர் என்னும் இருபிறப்பாளர்களாகிய மூவர்ணத்தாரும் முயற்சி செய்து, யக்ஞபூமிகளான இந்த தேசங்களை அடைய வேண்டும். சூத்திரர்கள் தங்கள் ஜீவனமான தொழில் நிமித்தமாக எந்தத் தேசத்திலும் வசிக்கலாம். ................ 25.  இதுவரை இந்த தர்ம சாஸ்திரத்தின் தோற்றம் முழுவதுமாகக் கூறப்பட்டது. இவ்வுலகம் தோன்றிய...

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-8

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-8 அத்தியாயம் -2 ......................... 11.  பிரமாணங்களான ஸ்ருதிகளையும், ஸ்ம்ருதிகளையும் எந்த பிராமணனோ, க்ஷத்ரியனோ, வைசியனோ அவமதித்து தூஷிக்கின்றானோ, அப்படிப்பட்ட நாஸ்திகளை நல்லவர்கள் புறக்கணிக்க  வேண்டும். (நாஸ்திகள் என்பவன் முற்றிலும் வேதத்தை ஏற்காதவன்.அப்படிப்பட்ட முதல் மூன்று ஜாதியைச்சேர்ந்த நாஸ்திகர்களையும் ஜாதியைவிட்டு விலக்கிவிடுதல்,சமுதாயத்தைவிட்டு விலக்கிவைத்தல் போன்ற பழக்கங்கள் முற்காலத்தில் இருந்துள்ளன) ................... 12.  வேதம், ஸ்ம்ருதி, நல்ல ஆசாரம், சுய ஆனந்தம் இந்த நான்கும் தர்மத்தின்  சொரூபம் என்று கூறுவார்கள் பெரியோர். ................... 13.  அர்த்தம், காமம் இவைகளில் விருப்பம் இல்லாதவனுக்கே தர்ம ஞானம் விதிக்கப் பட்டுள்ளது. தர்மத்தை அறிய விரும்புபவனுக்கு முக்கியமான பிரமாணம் வேதமே ஆகும். .............. 14.  எங்கே தர்ம சாஸ்திரங்களுக்குள் ஒன்றுக் கொன்று வேறுபாடு காணப்படுகின்றதோ, அங்கே இரண்டு விதமாக தர்மங்கள் கூறப்பட்டிருக்கும். வித்வான்கள் இவ்விரண்டு தர்மங்களையும் கடைப்பிட...

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-7

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-7 அத்தியாயம் -2 ......................... 1.  வேதம் முழுவதையும் நன்கு அறிந்தவர்களாகவும், விருப்பு வெறுப்பு அற்றவர்களாகவும் சாதுக்களாகவும் உள்ள மஹான்கள்  எப்போதும் அனுஷ்டிக்கின்ற தர்மம் எதுவோ அதை எடுத்தியம்புகிறேன், கேளுங்கள். ......................... 2.  விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக காரியங்களைச் செய்தல் என்பது  போற்றுதலுக்குரிய விஷயமன்று.  எனினும்  இவ்வுலகில் பலனை எதிர் நோக்காமல் காரியம் செய்வது என்பது  அரிதான விஷயம்.  வேதங்களை நன்கு படித்தல், வேதங்களில் கூறப் பட்டுள்ள தர்மங்களில் ஆழ்ந்து ஈடுபாடு  கொண்டிருத்தல் என்பதும் பலனைக் கொடுக்கக் கூடியதேயாகும். . (வேதங்களின் முக்கியமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.1. பலன்களைத்தரக்கூடிய செயல்களைக்குறித்த யாகங்கள்,பிரார்த்தனைகள் போன்றவை. 2. பலன்களைத் துறந்து முக்தியடைவதுபற்றிய போதனைகள்.) ....................... 3.  இவை இவை எனக்குத்தேவை என்று கோருவதற்கு ” சங்கல்பம்” என்று பெயர். சங்கல்பத்துக்கு மூல காரணமாக இருப்பது ஆசை. ஆசையாலேயே சங்...