Friday, 22 April 2016

About me

நான் 6 ஆண்டுகள் (2000-2005) வரை ராமகிருஷ்ண மடத்தில் துறவிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். தற்போது நான் அங்கு இல்லை. ஏன்? அங்கு இல்லை.நீங்கள் வெளியேற காரணம் என்ன என்று கேட்கிறீர்கள்.இதற்கான விடையை சற்று விரிவாக தருகிறேன். நான் எனது 20வது வயதில் கடவுளை காணவேண்டும் என்ற எண்ணத்தில் ராமகிருஷ்ண மடத்தில் சேர முயற்சித்தேன்.ஆனால் மடத்தின் செயல்பாடுகளை நன்கு தெரிந்து கொண்டபின் சேரவும் என அறிவுறித்தினார்கள்.அதனால் 2 வருடம் volunteer ஆக பணிபுரிந்தேன்.அதாவது வாரத்தில் 2 நாட்கள் அங்கே உள்ள பணிகளை செய்வது.மற்றும் திருவிழா நாட்களில் பணிபுரிவது.22வது வயதில் மடத்தில் துறவிக்கான பயிற்சியில் அங்கே சேர்ந்தேன்.2005 ல் கல்கத்தா பேலூர் மடத்தில் பயிற்சியை முடித்த சமயத்தில் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது.மடத்தில் இருந்தால் அதை செய்ய முடியாது.அதே நேரத்தில் மடத்தை விட்டு வெளியேறவும் விருப்பம் இல்லை. இந்த இக்கட்டன நிலையில் முடிவை குருதேவர் ராமகிருஷ்ணரிடம் ஒப்படைத்தேன்...ஒரு நாள் பேலுர் மடத்து நிர்வாகிகள் என்னை அழைத்து .உனக்கு இங்கு கிடைக்க வேண்டிய அனைத்து பயிற்சிகளும் கிடைத்துவிட்டது.இனி நீ மடத்தில் தங்க தேவையில்லை.உனது விருப்பம் போல செயல்படலாம் என்றார்கள்... நான் வெளியே வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்போது சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஓரளவு முன்னனேற்றம் ஏற்பட்டிருக்கிறது....

No comments:

Post a Comment