Posts

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-17

Image
  அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு - பாகம் -17 ஆன்மீகப் பயிற்சியுடன் , அன்றாடம் நடைமுறை வாழ்வில்   கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையம் குருதேவர்   சாரதைக்குப் போதித்தார் .   அவர் அளித்த   ஓரிரு   அறிவுரைகளைக் கூறினாலே   இதன் உண்மை புரிந்துவிடும் . குடும்ப   வாழ்வின் மிகச் சிறிய அம்சங்களைக்   கூட அவர் விடவில்லை .   எந்தப் பொருளையும் பயன்படுத்திவிட்டு   , கண்ட இடத்தில்   வைக்கக் கூடாது . அதற்கரிய இடத்தில்தான்   வைக்க வேண்டும் .   அடிக்கடி   பயன்படும்   பொருட்களைக் கைக்குச் சுலபமாக   எட்டும்   வகையில் அருகில் வைத்துக்கொள்ள   வேண்டும் . எப்போதோ தேவைப்படும்    பொருட்களை தூரத்தில்   வைக்கலாம் .   ஓரிடத்திலிருந்து   ஒரு பொருளை எடுத்தால்   , மீண்டும் அதை அதே இடத்தில் வைக்க வேண்டும் .   இப்படிச் செய்தால் ,   இருட்டில்கூடச்சிறிதும் தடுமாறாமல்   அந்தப்   பொருட்களை   எடுக்க முடியும் . ’ ...