வாழ்க்கைக் கல்வி -1
சீக்ஷா (அதாவது சிக்ஷா) என்றால் கல்வி; வல்லீ என்றால் பகுதி. கல்விபற்றி சிறப்பாகக் கூறுவதால் இந்தப் பகுதி சீக்ஷா வல்லி என்று அழைக்கப்படுகிறது. மனிதனுக்கு இரண்டு வகையான தேவைகள் உள்ளன. உணவு, உடை, தங்குமிடம் போன்றவை முதல் வகை; இவை அடிப்படைத் தேவைகள். ஆனால் இவற்றால் மட்டும் அவனால் திருப்தியுற்று நின்றுவிட முடிவதில்லை. அன்பு வேண்டும், ஆற்றல் வேண்டும், இன்பம் வேண்டும், அறிவு வேண்டும், இறைவனை நாட வேண்டும் - இவ்வாறு எத்தனையோ வேண்டியுள்ளன. ஒரு கோணத்தில் பார்க்கும் போது, அடிப்படைத் தேவைகளைவிட இவை முக்கியமானவை. இவை வாழ்க்கைத் தேவைகள் (ஞுதுடிண்tஞுணtடிச்டூ ணஞுஞுஞீண்). இந்த இரண்டுவகைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குத் துணை செய்கின்ற கல்வியே முழுக்கல்வியாக முடியும். அத்தகைய கல்வியையே நாம் வாழ்க்கைக் கல்வி என்கிறோம். வேத கால இந்தியாவில், ஏன், அன்னியர் படையெடுப்புகளால் நமது கலாச்சாரம் தடுமாறும்வரை இந்தியாவில் அத்தகைய கல்வியே நிலவியது. அதுவே குருகுலக் கல்வி முறை, புறச் சூழ்நிலை காரணமாகவும், பெற்றோர், சமுதாயம் என்று பலரது ஆதிக்கம் காரணமாகவும் மனம் ஒரு நிறம் பெறுமுன்னரே. அதாவது மிகச் சிறு வயதிலேயே சிறுவர...